தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சாரங்கபாணி கோவிலில், கடந்த மாதம் 28ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றமும், இதைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் தாயார் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 5ம் தேதி தேரோட்டமும், நேற்று இரவு பெருமாள் தாயார் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீ தேசிகர் சன்னதி எதிரில் மாலை மாற்றி ஊஞ்சல் கண்டருளி, திருக்கல்யாணம் மஹோத்ஸவம் நடைபெற்றது. இதில், கோமளவல்லித் தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். நேற்று முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள விடையாற்றி நிகழ்ச்சியில் சிம்மாஸன சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த யானைகளின் அணிவகுப்பு.