ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் தீயணைப்புத்துறை பாதுகாப்புடன் நடந்த ஆண்டாள் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 06:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் முதன்முறையாக தீயணைப்பு துறையினர் பாதுகாப்புடன் ஆண்டாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழாவின் 11ம் நாளான நேற்று தீர்த்தவாரி மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். பின்னர் மதியம் 12:00 மணிக்கு மேல் திருமுக்குளத்தில் ஆண்டாள் சடாரி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை அலுவலர் குருசாமி தலைமையில் வீரர்கள் குளத்தில் இறங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் கோவில் பட்டர்கள் சடாரி தீர்த்தவாத நிகழ்ச்சியை நடத்தினர். பின்னர் தீர்த்த வாரி மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சென்னை நங்கநல்லூர் சர்வ மங்களாம்பிகை சமேத தர்மலிங்கேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, மூவரசம்பட்டு ஊராட்சி குளத்தில் சீர்பாதம் தாங்கிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தகுந்த பாதுகாப்புடன் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி முதன் முறையாக நேற்று திருமுக்குளத்தில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புடன் தீர்த்தவாரி வைபவம் நடந்தது.