குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று துவங்கியது. குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் ஒரு மாதம் நடக்கிறது. நேற்று, கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக ஆழ்வார்பேட்டை கோதண்டராமர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் அபிஷேக பொருட்கள் ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடந்தன. இன்றும், நாளையும் திருப்பூச்சாற்று, கரக ஊர்வலம் நடக்கிறது. பத்தாம் தேதியில் இருந்து பல்வேறு உபயதாரர்கள் சார்பில் திருத்தேர் ஊர்வலம், 16ம் தேதி பூ குண்டம் இறங்குதல், 18ம் தேதி கோவில் திருத்தேர், 21ல் முத்து பல்லக்கு, 22ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது. மே 12 ல் விழா நிறைவு பெறுகிறது.