முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் ஊர்வலம் சித்தி விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் காப்புகட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்பு முத்துமாரியம்மன் பால்அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது.முத்துமாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பக்தர்கள் அக்கினி சட்டி, ஆயிரம் கண்பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.