ராசிபுரம் சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்வு.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2023 03:04
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டி ஜேடர்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிவு பெற்ற நிலையில் கோவில் நந்தவனத்தில் இருந்து அம்மனுக்கு சக்தி அழைக்கப்பட்டது இதில் 100-க்கும் மேற்பட்டோர் கத்தி போடும் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கத்தியால் தங்கள் கைகள், மார்பகங்களில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர்.கத்தி போடும்போது மார்பகங்களில் ஏற்படும் காயங்களுக்கு திருமஞ்சன பொடி தூவியும், திருமஞ்சன பொடி தூவுவதால் காயமானது 3 நாட்களில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையாக உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.