எழுமலை: எழுமலை பொட்டல் காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா எழுமலை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் சார்பாக நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, தீச்சட்டி, கிடாவெட்டி நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று நிறைவு விழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.