மேலுர்: கீழையூர், சுந்தரவள்ளியம்மன் பங்குனி மாத திருவிழா மார்ச் 28 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப். 4 முளைப்பாரி ஊர்வலமும், ஏப்.5 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், ஏப், 8 சக்தி விநாயகர் கோயிலில் இருந்து சுவாமி சிலைகள் மந்தைக்கு கொண்டு வரப்பட்டு மூன்று நாட்கள் அருள் பாலித்தனர். நேற்று மந்தையில் இருந்து சுந்தரவள்ளியம்மன், ஏமங்கருப்பு மற்றும் சுவாமி சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றதோடு திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.