Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குரு பெயர்ச்சி ஹோமம் அவிநாசி பிளாக் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா தீர்த்த குட ஊர்வலம் அவிநாசி பிளாக் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்தது: வீடு, கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்தது: வீடு, கோயில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

14 ஏப்
2023
08:04

சோபகிருது தமிழ்ப்புத்தாண்டு உத்தராயண புண்ணிய காலம், சித்திரை 1, (2023 ஏப்.14) வெள்ளிக்கிழமை, தேய்பிறை நவமி, திருவோண நட்சத்திரம், கடக லக்னம், மீன நவாம்சம் கூடிய சுப நாளில் பிறந்தது.  தமிழ்ப் புத்தாண்டையொட்டி, அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்ப் புத்தாண்டை நேற்று மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். காலையில் புத்தாடை உடுத்தி, கோவிலுக்கு சென்றனர். கோவில்களில் பக்தர்களை வரவேற்கும் விதமாக, நுழைவு வாயிலில் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. அனைத்து கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. ஏகாம்பரநாதர் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில், உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர். அன்னதானம் ஸ்தலசயனப் பெருமாள் கோவில், திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில், வெள்ளீஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம் காமாட்சியம்மன் கோவில், கடம்பாடி ஸ்ரீமாரி சின்னம்மன் கோவில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாகக் கலந்து

கடலூர்:தமிழ்ப்புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் கோவில்களில் மாலையில் நடந்த லட்சதீப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5.30 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை சிறப்பு பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. துர்கை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், சாலக்கரை, முதுநகர், நத்தப்பட்டு, அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவில்களில் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பஞ்சாங்கம் படித்தல், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து 26 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைகளுக்கு புது வஸ்திரம், துளசி, பூ, வெற்றிலை மற்றும் வடை மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு லட்சதீப உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

சிதம்பரம்: நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை பஞ்சாங்க படனம் நடந்தது. தில்லை காளியம்மன், கீழரத வீதி வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

பரங்கிப்பேட்டை: சஞ்சீவிராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தச்சக்காடு அய்யனர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


கிள்ளை: பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. தில்லை விடங்கன் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொõண்டனர்.

வாழ்த்து: தமிழ் புத்தாண்டை மாற்ற தி.மு.க., அரசு முயற்சித்தாலும், முதல்வர் வாழ்த்து கூறாவிட்டாலும், சித்திரை முதல் நாளையே புத்தாண்டாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழர்களின் உணர்வில், வாழ்வில் சித்திரை தமிழ் புத்தாண்டு இரண்டற கலந்து விட்டது.

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும்; இலங்கை, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும், சித்திரையே புத்தாண்டு தினமாக உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar