Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தமிழ்ப்புத்தாண்டு: 10,008 பழ ... காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‛தமிழ் நமது பெருமை: சத்குரு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
எழுத்தின் அளவு:
‛தமிழ் நமது பெருமை: சத்குரு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

பதிவு செய்த நாள்

14 ஏப்
2023
10:04

கோவை: ‛தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. என ஈஷா நிறுவனர் சத்குரு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி: உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க்கலாச்சாரத்தில், மண்ணை தாய் மண் எனச் சொல்லுகிறோம். ஏனெனில், அந்தக்காலத்திலிருந்தே மண் நம் உயிருக்கு மூலமானது, நம் தாய் போல என்று உணர்ந்து, நாம் பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது. அப்படி இருப்பினும், கடந்த இருபது, முப்பது வருடங்களில் நம் மண்ணைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம்.

நம் மண்ணைக்காக்க, நாம் அனைவரும் கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும். மேலும், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல் மட்டும் இல்லை. நாம் வாழும் முறையிலேயே நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், எல்லா இடங்களிலும், சித்தர், யோகிகள் என இருந்தனர். உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதால், ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்.

பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம். நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும் என்பதாலேயே, தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம். இதுதான் தமிழ் கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துக்களும் எனக் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar