பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
10:04
உளுந்துார்பேட்டை, வண்டிப்பாளையம் மழையம்மன் கோவில் சித்தரை திருவிழாவையொட்டி 8 கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா வண்டிப்பாளையம் மழையம்மன் கோவில் சித்தரை திருவிழா நடந்தது. பின்னர் நேற்று நண்பகல் 12 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது. மதியம் 3மணி அளவில் வண்டிப்பாளை யம், சின்னகுப்பம், ஏரிவண்டிபாளையம், மயிலங்குப்பம், சேந்தமங்கலம், கிருஷ்ணா ரெட்டிபாளையம், திம்மிரெட்டிப்பாளையம், கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். இரவு சுவாமி வீதி உலா நடந்தது.