சூலூர்: தமிழ் புத்தாண்டை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தமிழ் புத்தாண்டை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் அதிகாலை முதலே, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பாப்பம்பட்டி பிரிவில் உள்ள புடவை காரி மகாலட்சுமி, கருப்பராயன், கன்னிமார் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவிலில் அதிகாலை அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.