பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
03:04
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதியில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தங்க தேரோட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சி, தென்திருப்பதியில் வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இக்கோவிலில் காலை, 4:00 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்பு அலங்கார வைபவம், பூஜை, ஆரத்தி, ஏகாந்தம் ஆகியவை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்கள் தங்க தேரை, கோவிலை சுற்றி, மாட வீதிகளில் இழுத்து வந்து, நிலையில் சேர்த்தனர். இந்த விழாவில் கே.ஜி., நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன், அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர், கே.ஜி., தொழில் நிறுவனங்களின், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.