Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ... சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டை நாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்: இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டை நாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்: இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு

பதிவு செய்த நாள்

17 ஏப்
2023
04:04

மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை சென்னையில் இருந்து வந்த  இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது.  திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் உமையம்மை வழங்கிய ஞான பாலை அருந்தி தேவாரத்தில் முதல் பதிகத்தை பாடிய தலமான கோவிலுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் மேல கோபுர வாசல் அருகே நேற்று மதியம் யாகசாலை அமைப்பதற்காக குபேர மூலையில் ஜேசிபி எந்திரம் மூலம் மண் எடுப்பதற்காக பள்ளம்  தோண்டியபோது பூமிக்கு அடியில் 2 அடி ஆழத்தில் அரை அடி முதல் 2 அடி உயரமுள்ள 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து உடுக்கை, மணி, கலசம், சலங்கை, தீபத்தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களும், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள் பதிக்கப்பட்ட 410 முழுமையான செப்பேடுகளும், 83 பிண்ணப்பட்ட செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. தருமபுர ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிலைகள் மற்றும் செப்பேடுகளை  பார்வையிட்டு சிறப்பு பூஜைகளை நடத்தினார்.  தொடர்ந்து   மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம்  மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து சிலைகளை பார்வையிட்டுஆய்வு செய்தனர். கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் 13ம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்கலாம் எனவும் இவை அனைத்தும் மதிப்பிட முடியாதவை எனவும் கூறப்பட்டது இதனை அடுத்து சிலைகள் செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வருவாய் துறைகளின் கண்காணிப்பில் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து சீர்காழி சட்டை நாதர் கோவிலுக்கு வந்த  இந்து சமய அறநிலையத்துறை  பதிப்பக பிரிவினுக்கு செயல்படும்  திருக்கோவில் திருமடங்களின்  ஓலை சுவடிகள்  செப்பேடுகள் பராமரிப்பு பாதுகாப்பு நூலாக்க திட்டப்பணி முனைவர் தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா,  சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட  6 பேர்  கொண்ட குழுவினர்  கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவாரப் பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகளை பார்வையிட்டு அவை எந்த ஆண்டைச் சார்ந்தது, யாரால் எழுதப்பட்டது.  என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட ஆய்வில் செப்பேடுகள் தலா 400 கிராம் எடையும் 68 சென்டிமீட்டர் நீளமும், ஏழு புள்ளி அஞ்சு சென்டிமீட்டர் அகலமும் உடையதாக உள்ளது  கோவிலில் உள்ள கல்வெட்டுகளில்  தேவாரப் பாடல்கள் செப்பேடுகளில் பதிக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை செப்பேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை முதன் முறையாக இங்கு நான் இருக்கும் மேற்பட்ட தேவாரம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது  கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் என்ன பதிகங்கள் உள்ளன புதிய  தேவாரப் பதிகங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தனர். ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கோவில் கண்காணிப்பாளர் செந்தில் குமார் ரவி ரவிச்சந்திரன் மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள் பத்ரி நாராயணன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன்பூண்டி கோவிலில் நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் ஆலய பிரவேசம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar