மேலூர்: மேலூரில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயிலில் விரைவில் திருப்பணிகள் துவங்கவுள்ளன.இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்டன. கோயிலில் பல இடங்களில் மழை காலங்களில் ஒழுகின்றன. பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயிலை புனரமைக்க வேண்டும் என சாமி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் ராஜகோபுரம், காமாட்சி அம்மன் கோபுரம், கல்யாண சுந்தரேஸ்வரர் கோபுரம் ஆகியவற்றை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். ""பழுதான பகுதிகளை சீரமைத்து விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும், என எம்.எல்.ஏ., தெரிவித்தார். அ.தி.மு.க., நகர் தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன் உடனிருந்தனர்.