பதிவு செய்த நாள்
22
செப்
2012
10:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.தென் திருப்பதி என, பக்தர்களால் நம்பப்படும் இக்கோயிலில், காலை 4 மணிக்கு திருமஞ்சனம் சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு கருடசேவை நடக்கிறது. இதையொட்டி ஸ்ரீனிவாச பெருமாள், ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பட்டு, திருவண்ணாமலை அடிவாரம் மண்டபத்திற்கு வருதல், மாலை 3 மணிக்கு உற்சவர் கிரிவலம் வருதல் நடக்கிறது. திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதால்,அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. சிவகாசி, ராஜபாளையம், மதுரை, திருநெல்வேலியிலிருந்து பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் உட்பட ஊழியர்கள் செய்து வருகின்றனர்.