காரியாபட்டி: காரியாபட்டியில் 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகாசனம், கலச பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க பெண்கள் 504 பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து, பஸ் ஸ்டாண்ட்: முக்கு ரோடு, செவல்பட்டி வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.