அருள் மாரியம்மன் செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2023 10:04
அவிநாசி: அவிநாசி கச்சேரி வீதியில்,நாயக்கன் தோட்டம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள் மாரியம்மன்,செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி கச்சேரி வீதி நாயக்கன் தோட்டம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள் மாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால வேள்வி யாக பூஜைகள், பேரொளி வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில்,நேற்று காலை அர்ச்சகர்கள் அனந்தராமன், கார்த்தி முன்னிலையில் தீர்த்த கலசங்கள் கோவிலை வலம் வந்து செல்வ விநாயகர் கோபுர விமானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ அருள் மாரியம்மன் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தச தரிசனம், மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.