பதிவு செய்த நாள்
22
செப்
2012
10:09
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோவிலின், ஆறு உண்டியல்களில், ஆறு லட்ச ரூபாய், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவிலில், 12 உண்டியல்கள் உள்ளன. நேற்று முன்தினம், ஆறு உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் உதவி ஆணையர் தியாகராஜன் முன்னிலையில், பணியாளர்கள், உண்டியல் பணத்தை எண்ணினர். மொத்தம், ஆறு லட்ச ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அத்துடன், 4.5 கிராம் தங்க நகைகள், 271 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன.