சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 12:04
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் காலை, இரவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினா். சிறப்பு பூஜைகளுக்கு பின், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் பவனி வந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.