தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் : பக்தர்கள் உப்பு வீசி நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 05:04
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், நடந்த சித்திரை தேரோட்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இன்று முக்கிய சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. குன்னூர் ஆர்.டி.ஓ., பூஷண் குமார் வடம் பிடிக்க, தாசப் பளஞ்சிக அமைப்பினர், பக்தர்கள் வடம் பிடித்தனர். விழாவில், பக்தர்கள் உப்பு வீசி நேர்த்திகடன் செலுத்தினர். முன்னதாக, வி.பி., தெரு துருவம்மன் கோவிலில் இருந்து தாசப்பளஞ்சிக மகளிர் இளைஞர் குழுவினர், நடனமாடினர். இதில் சுவாமி மற்றும் பல்வேறு வேடமணிந்த கலைஞர்களின் நடனம், சிலம்பு நடனம், மயிலாட்டம் உள்ளிட்டவை நடந்தன. விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம், இசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை நடந்தன. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.