Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மாரியம்மன் கோவிலில் ... சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா : கருட கொடி ஏற்றம் சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவக்கம் : 7 கிராம மக்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவக்கம் : 7 கிராம மக்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2023
08:04

உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் துவக்கமாக 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து வழிபட்டு சாகை வார்த்தல் விழா துவங்கியது.

உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. நேற்று மாலை 4 மணிளவில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இந்த சாகை வார்த்தல் விழாவில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் தேங்காய் உடைத்து தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

சாகை வார்த்தல் விழாவுடன் துவங்கியது. இன்று பந்தலடியில் தாலி கட்டுதல் (பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(20ம் தேதி) சந்தனு சரிதம், இரவு 10 மணிக்கு சுவாமி புறப்பாடும், 21ம் தேதி பீஷ்மர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 22 ஆம் தேதி தர்மர் பிறப்பும் இரவு சுவாமி புறப்பாடும், 23ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 24ம் தேதி பகாசூரம் வதம், இரவு சுவாமி புறப்பாடும், 25ம் தேதி பாஞ்சாலி திருமணமும், இரவு சுவாமி புறப்பாடும், 26 ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 27 ஆம் தேதி இராஜசுய யாகம், இரவு சுவாமி புறப்பாடும், 28ம் தேதி விராடபர்வம், வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி கிருஷ்ணன் தூது, இரவு சுவாமி புறப்பாடும், 30ம் தேதி காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது. 1ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், 2ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடக்கிறது. 3ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை தொகுதி மணிக்கண்ணன் எம் ன.எல்.ஏ., துவக்கி வைக்கிறார். மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4ம் தேதி விடையாத்தி, 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar