சூலூர்: சித்திரை மாத அமாவாசையை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தமிழ் புத்தாண்டின் முதல் அமாவாசை தினமான நேற்று, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலூர் சிவன் கோவில், பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல், கிராமங்களில் உள்ள குலதெய்வ கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.