பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
03:04
செஞ்சி: செஞ்சி விசாலாட்சி உடனுறை காசி விவஸ்வநாதர் கோவிலில் 108 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்ட சிவன் இரவு பூஜை நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் தமிழகம் முழுவதும் 221 இடங்களில் சிவன் இரவு பூஜை நடத்திய சிவானடியார்கள் 222வது நிகழ்ச்சியாக சிவன் இரவு பூஜை நடத்தினர். இக்கோவிலில் திருப்பணிகள் நடக்கவும், உலக நன்மைக்காகவும் நடந்த இந்த பூஜையில் கலந்து கொள்ள அரக்கோணம், காட்டுமன்னார் கோவில், நெய்வேலி, கடலூர், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 108 சிவனடியார்களை காந்தி பஜார் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து சிவ வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை 6 மணிக்கு கோபூஜையும், 7 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் நெய்வேலி கந்தசாமி, செஞ்சி பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் சிவன் இரவு பூஜை நடந்தது. இரவு 9 மணிவரை நடந்த பூஜையை திருக்கனூர். திருமங்கலம் ஸ்ரீசிதம்பர ஈஸ்வரர் கோவில் ஆதீனம் கணேச சிவாச்சியார் நடத்தினர். சிவலிங்கம், நந்தி பகவானுக்கு சிலைகளுக்கு சிவனடியாகர்கள் பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். சிவபுராணம் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து காசி விஸ்வநாதருக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பகத்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.