பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
04:04
கோபால்பட்டி,கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் 48 ம் நாள் மண்டல பூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கோபால்பட்டியில் உள்ள விநாயகர், காளியம்மன், பாமாருக்மணி சமேத கிருஷ்ணர் ,கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 3 நடந்தது.அதனை தொடர்ந்து 48 நாட்களும் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.நேற்று 48 வதுநாள் மண்டல பூஜையை ஒட்டி விநாயகர்,காளியம்மன், கற்பகாம்பாள் ,கபாலீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் கோவில் வளாகத்தில் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கணபதிபூஜையுடன், மண்டல பூஜை யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து புண்ணியாகவாஜனம், தேவதாஅனுஞ்ஞை, வேதிகா அர்ச்சனை, ருத்ரசமக.பஞ்சூக்தம், வேதபாராயணம்.பூர்ணாகுதி அபிஷேக ஆராதானை.பிரசாரம் வழங்குதல்.ஆகிய பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து கோவிலிலுள்ள ஆஞ்சநேயர், துர்க்கை, முருகன், நவக்கிரகங்கள்,சௌர்ண ஆகாச பைரவர்,தட்சிணாமூர்த்தி,சண்டிகேசுவரர்,ஐயப்பன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மண்டல பூஜையை கோபால்பட்டி நாயுடு மகாஜன சங்க அறக்கட்டளை நிர்வாகத்தினர் தாமோதரன், மோகன்ராம், மனோகரன், பாலகுரு, கந்தசாமி,பரந்தாமன்,நாராயணமூர்த்தி,அழகர்சாமி பி.அழகர்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.