பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
04:04
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ( ஏப்.,26ல்) கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா துவங்கியது.
பழநி மலைகோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஏப்.,26 முதல் மே.,5 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. ஏப்., 26 கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஏப்.,27 காலை சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது. தினமும் சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம், ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மே., 2., மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதன்பின் சேஷ வாகனத்தில் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மே.4ல் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும்.என பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மே.,5.,ல் திரு ஆவினன்குடி கோயிலுக்கு பால் குடம் எடுத்தல், வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி வெள்ளி தேர் பவனி நடைபெற உள்ளது.