கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2023 05:04
கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை 10:00 மணியளவில் மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.