பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
07:04
சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் உள்ள குரு ஸ்தலத்தில் குரு பெயர்ச்சி பரிகார பூஜைகள் நடந்தது. இந்நிகழ்வில் சுயம்புவான குரு பகவான் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு ஏப் 20., முதல் தொடர்ந்து 6 கால இலட்சார்ச்சனை பூஜைகள் நடந்தது. இதையடுத்து மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்து வழிபட்டனர். பரிகார மஹாயாக வேள்விகளை ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாதன் பட்டர் ஆகியோரின் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் பட்டர்கள் ராஜா, கோபால், பாலாஜி, கோவிந்தமூர்த்தி ஆகியோர் பாராயணங்கள் வேத உபநிஷங்கள் முழங்க யாக வேள்வி நடத்தினர். குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.24 மணிக்கு பெயர்ச்சியானார். இதையடுத்து கோபால் பட்டர் தலைமையில் கடம் புறப்பாடாகி தவக்கோலத்தில் உள்ள குருபகவான், சக்கரத்தாழ்வாருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து ஸ்ரீ குரு பகவான் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து குரு பெயர்ச்சிக்கான பரிகாரங்கள் நடந்தது. இந்நிகழ்வில் எம்.எல்.ஏ., வெங்கடேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சேர்மன் ஜெயராமன், நகர செயலாளர் சத்யபிரகாஷ், பணியாளர்கள் மணி, பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உட்பட போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் பாலமுருகன், கணக்கர் நாகராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.