Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவித்துறை குரு ஸ்தலத்தில் குரு ... அகஸ்தீஸ்வரர் கோவிலில் ராசி மண்டல குரு பகவானுக்கு மகா யாகம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ராசி மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2023
10:04

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் குரு அனுக்கிரஹ ஸ்தலமான ஸ்ரீமேதா தெட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஶ்ரீமேதா தெட்சினாமூர்த்தி தங்ககவச அலங்காரத்தில் காட்சி. தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 
நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இரவு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சரியாக 11.24 மணிக்கு இடம் பெயர்ந்தார். தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை சிவாலயங்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடையமுடியும். அந்த வகையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குரு அனுக்கிரகத் தலமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேதா தெட்சினாமூர்த்தி சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. ஸ்ரீமேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது.  பஞ்சமுக அர்ச்சனை, பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar