பதிவு செய்த நாள்
24
செப்
2012
10:09
மணப்பாறை: மணப்பாறை வரதராஜ பெருமாள் கோவிலில், பொதுமக்கள் நலன்கருதி அஷ்டலட்சுமி யாகம் நடந்தது.மணப்பாறை வரதராஜபெருமாள் கோவிலில், புரட்டாசி தழுகை விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமையான நேற்றுமுன்தினம், பொதுமக்கள் நலன்கருதி அஷ்டலட்சுமி யாகம் நடந்தது.நகராட்சி தலைவர் சாந்தா, நாட்டாண்மை கலையரசன், பரம்பரை அறங்காவலர் வீரமணி, செயல் அலுவலர் ஜானகி தலைமையில் யாகவேள்வி நடந்தது.நிகழ்ச்சியில் சின்னநாட்டாண்மை மேகன், கவுன்சிலர் சரவணன், செந்தில், வக்கீல் கண்ணையன், வையம்பட்டி கோபால்சாமி, முன்னாள் தலைவர் ராஜலட்சுமி, ரீவைண்டிங் ராமசாமி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் செல்வா, முன்னாள் கவுன்சிலர் சங்கர், தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஞானம் குருக்கள் தலைமையில், அஷ்டலட்சுமி யாகமும், அறங்காவலர் வீரமணி குடும்பத்தார் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.