பதிவு செய்த நாள்
24
செப்
2012
10:09
கரூர்: தாந்தோணி கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், இன்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாந்தோணி வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம், பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த, 15ம் தேதி விழா தொடங்கியது. 18ம் தேதி துவஜாரோஹணம், 21ல் வெள்ளி கருட சேவை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மாலை, 4.30 மணி முதல், 5.30 மணிக்குள் திருக் கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும், 26ம் தேதி காலை, 9 மணிக்கு திருத்தேர் ஊர்வலமும், 4ம் தேதி ஹனுமந்த வாகனம், 7ல் முத்து பல்லக்கு, 8ல் ஆளும் பல்லக்கு, 9ல் புஷ்ப பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளான, 29, அக்டோபர், 6 மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.