Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ... ராமானுஜரின் 1006வது ஜெயந்தி உற்சவம் கோலாகலம் ராமானுஜரின் 1006வது ஜெயந்தி உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டநாதர் கோவிலில் திருமுலைபால் விழா: தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டநாதர் கோவிலில் திருமுலைபால் விழா: தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2023
12:04

மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோவிலில் திருமுலைபால் விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இத்தலத்தில் சமயக்குரவர்களுள் ஒருவரான சம்பந்தர்,  சிவவாத இருதயர்- பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். முருகனின் அம்சம், இளைய பிள்ளையார் என்றும் இவர் வழங்கப்படுகிறார். சிவபாதை இருதயர் தனது மூன்று வயது குழந்தையான சம்பந்தரை சட்டநாதர் கோவில் பிரம்ம தீர்த்தக்கரையில் அமர வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட்டு அம்மா, அப்பா என்று அழுதுள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்ட சிவபெருமான், பார்வதியை நோக்கி குழந்தையின் பசி போக்க கேட்டுள்ளார். அதன்படி சிவனுடன் உமையம்மை சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினார் பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்திருந்தார் குளித்துவிட்டு வந்த தந்தை யார் பால் கொடுத்தது என கேட்டு பூச்சியால் சம்பந்தரை அடிக்க வாங்கிய போது சிவன் பார்வதி தரிசனம் தந்த திசையை காட்டி தேவாரத்தின் முதல் அதிகமான தோடுடைய செவியன் என்ற பதிகத்தை திருஞானசம்பந்தர் பாடியுள்ளார் அதனைக் கேட்ட தந்தை பரவசமடைந்தார். இந்த தலத்தில் ஞானசம்பந்தர் 67 பதிவுகள் பாடியுள்ளார். சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வாங்கிய நிகழ்ச்சி  ஆண்டுதோறும் இக்கோவிலில் திருமுலை பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு வரும் மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் கோவில்  மண்டபத்தில்  தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. ஊமையம்மை எழுந்தருளி ஞானசம்பந்தருக்கு தங்க கிண்ணத்தில் பால் கொடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar