பதிவு செய்த நாள்
25
ஏப்
2023
01:04
பல்லடம்:பல்லடம் அருகே, ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் முடுப்பரை அம்மன் கோவில் உள்ளது. மூலவராக பத்ரகாளி அம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆறாம் ஆண்டு விழா மற்றும் சித்திரை மாத மிருகசீரிஷ நட்சத்திர திருவிழா ஆகியவை கொண்டாடப்பட்டன. முன்னதாக, ஏப்., 22. அன்று கணபதி ஹோமம், கலச பூஜை, கொடியேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம், மகா சண்டி ஹோமம், நவகிரக பூஜை,, பொங்கல் வைத்தல், ம்ருத்யுஞ்ஜய பூஜை, நாகர் அபிஷேகம், அம்மனுக்கு பொங்கல் ஊட்டுதல், தீப ஆரத்தி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, சாயான பூஜை, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புறப்பாடு, கோவில் சுற்றி வருதல், மலர்களால் அபிஷேகம், அம்மனை கர்ப்ப கிரகத்துக்கு கொண்டு வருதல் உள்ளிட்டவை நடந்தன.