பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2023 04:04
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா துவங்கியது.
பழநி மலைகோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை இரவு 7:00 மணிக்கு ரதவீதியில் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழா நாட்களில் சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மே.,2 மாலை திருக்கல்யாண உற்சவம் இரவு 7:30 மணிக்கு மேல் நடக்கும். அதன்பின் சேஷ வாகனத்தில் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மே.4ல் காலை 7:35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். மே.,5 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் பிரகாஷ், கந்தவிலாஸ் செல்வகுமார், கன்பத் கிராண்ட், உரிமையாளர் ஹரிஹரமுத்து அய்யர், பெரிய நாயகி அம்மன் அறக்கட்டளை சுந்தரம், கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.