பதிவு செய்த நாள்
26
ஏப்
2023
04:04
நத்தம், கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி கணவாய் கருப்புச்சாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நேற்று விநாயகர் பூஜை, மகா சங்கல்யம், வாஸ்து சாந்தி மற்றும் யாக சாலையில் வேத பாராயண பூஜைகள் நடந்தது. இன்று யாகசாலை வேதபாராயணம், நாடி சந்தானம், மூலிகை யாகம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்ட 2-ம் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தமும், பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ, நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ராமராசு, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஊராட்சி தலைவர்கள் நிஷா ராமகிருஷ்ணன், கந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.