குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன், மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2023 04:04
சூலூர்: குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது.
குமாரபாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், கடந்த,22 ம்தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டது, தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினார்கள். தினசரி காலை பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலை வலம் வந்தனர். நேற்று சவுடேஸ்வரி அம்மன் கொலு, ராகு தீபம் கொண்டு வரும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மை அழைத்தல் நடந்தது. இன்று காலை, மேள, தாளத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். சிறப்பு அலங்கார பூஜையில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருக அம்மனை வழிபட்டனர்.