பதிவு செய்த நாள்
25
செப்
2012
10:09
உடன்குடி: உடன்குடி பகுதியில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 30 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடன்குடி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில் உடன்குடி சந்தையடியூர், சோமநாதபுரம், சிவலூர், கொட்டங்காடு, சிவலூர் காலனி, உதிரமாடன்குடியிருப்பு, ஜே.ஜே.நகர், சமத்துவபுரம், நடுக்காலன் குடியிருப்பு, பெருமாள்புரம், வைத்திலிங்கபுரம், தேரியூர், முத்துகிருஷ்ணாபுரம், மெஞ்ஞானபுரம் பஜார், அனைத்தலை, வீரவநல்லூர், ஆணையூர், அடைக்கலாபுரம், பரமன்குறிச்சி பஜார், அய்யனார்நகர், கூழபெரியவன் விளை, குருநாதபுரம், வீரப்பநாடார் குடியிருப்பு, எள்ளுவிளை, தேரிகுடியிருப்பு, அடப்பநல்லூர், உடன்குடி மெயின் பஜார், கீழ பஜாரில் 8 அடி விநாயகர் என 30 சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. வைக்கப்பட்ட சிலைகளுக்கு தினசரி சிறப்பு பூஜையும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. மாலையில் உடன்குடி மெயின் பஜாரில் அனைத்து சிலைகளும் கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தை ரமேஷ்பாபு காவி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு உடன்குடி டவுன் பஞ்.,கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். உடன்குடி டவுன் பஞ்.,கவுன்சிலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாநில பேச்சாளர் சுப்புராஜ் பேசினார். ஊர்வலம் உடன்குடி பஜார் வழியாகச் சென்று திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.