ஸ்ரீவைகுண்டம்: பேட் மாநகரத்தில் மழைக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், குடிதண்ணீர் தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்ற நோக்கில் பேட்மாநகரம் பகுதி மக்கள் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைமை இமாம் ஹாஜி அப்துல் ஆமிது ஆலிம் தலைமையில் ஒரு நாள் நோன்பு இருந்து சிறப்பு தொழுகை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைவர் ஹாஜி பீர் முகம்மது, துணைத்தலைவர் சிராஜ்தீன், நூருல் ஈமான் கல்வி அறக்ககட்டளை நிர்வாகி சித்திக் ஆலிம், ஆசிரியர்கள் அகமது கபிர் ஆலிம், அப்துல் காதர் ஆலிம், லியாகத் ஆலிம், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் நட்டார், துணைத்தலைவர் அஷ்ரப் அலி ஆலிம், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பேட்மா நகரம் கிளை செயல் வீரர்கள் உள்பட ஐநூருக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.