மீனாட்சி சமேத மொக்கணீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 04:04
அவிநாசி: அவிநாசி வட்டம், குட்டகம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி சமேத மொக்கணீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
அவிநாசி வட்டம்,குட்டகம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், மாணிக்கவாசகரால் திருவாசக பாடல் பெற்ற தலமான ஸ்ரீ மீனாட்சி சமேத மொக்கணீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா மங்கள இசை,விக்னேஸ்வர பூஜை,ஏக தச ருத்ர ஜெப பாராயணம், திருமுறை பாராயணம், மஹா தீபாராதனையுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத மொக்கணீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.