மேட்டுப்பாளையம்: காரமடை நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காரமடை வடக்கு ரத வீதியில், மிகவும் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் நூறாவது ஆண்டு திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுடன் துவங்கியது. சக்தி கரகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் என பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. நேற்று மஞ்சள் நீராட்டும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மே மாதம் இரண்டாம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தேவேந்திரா குலத்தார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.