தேவகோட்டை: தேவகோட்டை ஆதிசங்கரர் கோவிலில் சென்னை ஆதிசங்கரா டிரஸ்ட் சார்பில் மூன்று தினங்கள் சங்கரர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் இருந்தும், காசி யிலிருந்து 16 வேதபண்டிதர்களும் ஆதிசங்கரர் சந்நிதியில் மூன்று நாட்களும் இரு நேரங்களில் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்தனர். வேதபாராயணங்களை தொடர்ந்து ஆதி சங்கரருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. மூன்று தினங்களும் தியாகிகள் பூங்கா அருகே அன்னதானம் நடத்தினர். சங்கரா டிரஸ்ட் நிர்வாகிகளில் கைலாசம், கேப்டன் ரமேஷ், நாகநாதன், தேவகோட்டை பிராமண சங்க தலைவர் ராமசாமி, கோவிலைச் சேர்ந்த ஆடிட்டர் ராமசாமி துரை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.