பதிவு செய்த நாள்
28
ஏப்
2023
04:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் ரூபாய், 43 லட்சத்து 90 ஆயிரத்து 877 ரூபாய் காணிக்கையாக இருந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. உண்டியல் எண்ணும் பணியை அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி, உதவி கமிஷனர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். பொது உண்டியலில், 38 லட்சத்து 52 ஆயிரத்து 567 ரூபாயும், திருப்பணி உண்டியலில் 94 ஆயிரத்து 377 ரூபாயும், கோசாலை உண்டியலில், 4 லட்சத்து 43 ஆயிரத்து 933 ரூபாயும் என மொத்தம், 43 லட்சத்து 90 ஆயிரத்து 877 ரூபாய் காணிக்கையாக இருந்தது. அதோடு, தங்கம், 62 கிராம், 500 மில்லிகிராமும், வெள்ளி, 2 கிலோ 220 கிராமும், பித்தளை, 3 கிலோ 200 கிராமும் காணிக்கையாக இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர்.