மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம், ஜூன் முதல் தேதி நடைபெறுவதை அடுத்து, யாகசாலை அமைக்க, பாலக்கால் பூஜை நடந்தது.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 2012ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் முதல் தேதி இக்கோவில் கும்பாபிஷேகம், நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்க, நேற்று காலை பாலக்கால் பூஜை, கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயபாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இப்பூஜையில் கிட்டாம்பாளையம், மருதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.