பதிவு செய்த நாள்
28
ஏப்
2023
04:04
வேடசந்தூர்: பாலப்பட்டி ஊராட்சி பாலப்பட்டி கோட்டையில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மங்கல இசை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய விழாவில் தீர்த்தம் அழைத்தல், யாக பூஜைகளைத் தொடர்ந்து, கோபுர கலசம் வைத்தல், சுவாமிகளுக்கு கண் திறப்பு வைபவம் நடந்தது. தொடர்ந்து நான்காம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, கடங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. பாலப்பட்டி ஊராட்சி பெரியவர் அப்புகுட்டி தலைமையில், 18 குக்கிகிராம மக்களும் பங்கேற்றனர். விழாவில் கரூர் எம்.பி., ஜோதிமணி, வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், ஒன்றிய தலைவர் சௌடீஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, ஒன்றிய கவுன்சிலர் கௌசல்யா, ஊராட்சித் தலைவர் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.