சென்னை: சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பழங்கால கட்டமைப்புபடி, பல கோடி ரூபாய் மதிப்பில், பத்மாவதி தாயார் கோவில் கட்டபட்டது. கடந்த மார்ச் மாதம், 17ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதையடுத்து, மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. மண்டல பூஜைகள் நிறைவை முன்னிட்டு, சகஸ்ர கலசாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகம் துவங்கி 11:00 மணிக்கு நிறைவு பெற்றது. இதில், 1,008 கும்ப நீர், மூலவர் பத்மாவதி தாயாருக்கு சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.