சூலூர்: குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி ஹோமம் நடந்தது.
சூலூர் அடுத்த குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி பரிஹார ஹோமம் நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜையில், பல்வேறு திரவியங்களை கொண்டு பரிஹார ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, குரு பகவான் மற்றும் நவ கிரகங்களுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.