மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில், விளையாட்டு மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சிவ சாதுக்களின் ஊர்வலம் நடந்தது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில், விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இன்று மதியம் நவநாத சித்தர்கள் மகேஸ்வர பூஜை செய்யப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் யாக பூஜைகள் நடந்தன. பின்பு சித்தர்களின் கலச ஊர்வலம், பெண்கள் சீர்தெட்டுக்குடனும், அர்த்தநாரீஸ்வரர் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, சித்தர்கள் கலச ஊர்வலத்தின் முன்பாக, சிவ சாதுக்களின் ஊர்வலம் சென்றது. இதில் ஏராளமான சிவசாதுக்கள் பங்கேற்றனர். சக்தி விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மகாதேவபுரம் விளையாட்டு மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.