பதிவு செய்த நாள்
02
மே
2023
03:05
சூலூர்: சூலூர் காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். தினமும் அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. திருவிழாவை ஒட்டி, திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, குங்குமம், பூக்களால் திருவிளக்குக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மதியம், இரவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து அம்மன் சப்பரத்தில் அழைத்தலும், பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.