சூலூர் தங்க முத்து மாரியம்மனுக்கு நாளை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 03:05
சூலூர்: ரங்கநாதபுரம் ஸ்ரீ தங்க முத்து மாரியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கண்ணம்பாளையம் பேரூராட்சி ரங்கநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, ஏப்., 25 ம்தேதி இரவு, நோன்பு சாட்டப்பட்டது. 29 ம்தேதி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடி வருகின்றனர். நேற்று விநாயகர் பொங்கல், கங்கணம் கட்டும் பூஜைகள் நடந்தன. இன்று கும்பம் கொண்டு வருதல், அம்மை அழைத்தல், பூவோடு சுற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நாளை அதிகாலை, 4:00 மணிக்கு தங்க முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.