அன்னூர்: வடுகபாளையம் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.
நாரணாபுரம் ஊராட்சி, வடுக பாளையத்தில், பழமையான அங்காளம்மன் மற்றும் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிஷேக எட்டாம் ஆண்டு விழா இன்று நடந்தது. காலையில் தீர்த்த கலசங்களை வைத்து, சிறப்பு யாகங்கள் நடந்தன. காலை 11:00 மணிக்கு அங்காளம்மன் மற்றும் பேச்சியம்மனுக்கு விபூதி, மஞ்சள், சந்தனம், பால், இளநீர், எலுமிச்சை, பன்னீர் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீர்த்த கலசத்தில் இருந்து தீர்த்த அபிஷேகமும் நடந்தது. மதியம் அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.