திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு மே4 ல் தேரோட்டம் நடக்கிறது.,
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். ஏப்.25 ல் கொடியேற்றி காப்புக்கட்டி பிரமோத்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு வாகனங்களில் பெருமாள் திருவீதி வலம் வந்தார். நேற்று மாலை பெருமாளுக்கு சூரிய ஒளியில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் திருவீதி வலம் வந்தார். இன்று குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நாளை மாலை 4:26 மணிக்கு தேருக்கு தலையலங்காரம் கண்டருளலும், இரவில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். மே4ல் காலை 7:40 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலை 4:36 மணிக்கு தேரோட்டம் வடம் பிடித்தலும் நடைபெறும். மே5ல் புஷ்பயாகம் வாசித்தலும், 12ம் திருநாளில் புஷ்பப்பல்லக்குடன் உத்ஸவம் நிறைவடைகிறது.